Monday, January 9, 2012

சென்னை, தியாகராய நகரில் சீல்' வைத்த கடைகளை 6 வாரம் திறக்க அனுமதி:


தியாகராய நகரில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந்தேதி ஏராளமான கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த கடைகளை பண்டிகைக்காக திறக்க அனுமதி கோரி சுப்ரீம்கோர்ட்டில் வியாபாரிகள் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
 
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், சீல் வைத்த கடைகளை 6 வாரம் திறக்கலாம் என்று உத்தரவிட்டனர். சீல் வைப்பு தொடர்பான இறுதி உத்தரவை பெற ஐகோர்ட்டை அணுகும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 
கடைக்காரர்களின் மனுவை விரைந்து விசாரிக்க ஐகோர்ட்டுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

ஊடகங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் யாருக்கும் கிடையாது:பிரதமர் மன்மோகன்


டெல்லியில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரதமர் மன்மோகன் சிங் ஊடகங்களை குறித்து கூறியிருப்பதாவது:  
 
மக்களுக்கு செய்திகளை தெரியப்படுத்தும் ஊடகங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் யாருக்கும் கிடையாது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து ஊடகங்கள் மற்றும் அதனுடைய செயல்பாடு பற்றிய விவாதம் நாட்டில் நடைபெற்று வருகிறது என கூறியுள்ளார்.
 
மேலும், ஊடகங்களில் உண்மையான உணர்ச்சிமிக்க செய்திகளை வெளியிடுவதற்கு ஊக்குவிக்கப்பட வேண்டும். தவறான செய்திகளை வெளியிடக்கூடாது. அதுமட்டுமின்றி பணம் கொடுத்தால் ஊடகங்களில் தவறான செய்திகள் வெளியாவதை தவிர்க்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஓய்வூதிய திட்டம்


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் உரையாற்றியபோது:
 
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்களுக்கு புதிய பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் திட்டம் துவங்கப்படும். இயற்கையான மரணத்துக்கு குறைந்த ஆயுள் காப்பீட்டு திட்டமும் இதில் அடங்கும். வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்படுவதோடு,  அவர்களுடைய பாதுகாப்பிற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவை நவீனமயமாக்க வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் உதவுவார்கள் என தான் நம்புவதாகவும் கூறினார்

ABDUL HAMEED INTERVIEW

tamilnadu siddah,ayurvwdha,unani doctors award programmes

tamilnadu siddah,ayurvwdha,unani doctors award programmes

tamilnadu siddah,ayurvwdha,unani doctors award programmes


tamilnadu prayana porul thayaripore sangam

Sunday, January 8, 2012

tamilnadu sidha,ayurveda,unani,accupuncture doctors award function


Tamilnadu prayana porul thayaripore sangam








CHENNAI BOOK FAIR












CHENNAI BOOK FAIR


பாகிஸ்தான் சிறையிலிருந்து 180 இந்தியர்கள் விடுதலைஇந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக பாகிஸ்தான் நாட்டின் நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 179 மீனவர்கள் உள்ளிட்ட 180 இந்தியர்களை அந்நாடு இன்று விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட அனைவரும் 4 பஸ்களில் லாகூர் அருகே வாகா எல்லைக்கு கொண்டுவரப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 179 மீனவர்கள் தவிர மீதமுள்ள ஒரு நபர் பாகிஸ்தான் எல்லையில் அத்து மீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவராவார். அவரது பெயர் சாமா யூசுப் ஆகும். நன்னடத்தை காரணமாக இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தான் சிறை குறித்து கூறியதாவது:- 'பாகிஸ்தான் சிறையில் இன்னும் 271 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 320 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தானிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம் நாங்கள் விடுதலை அடைந்திருக்கிறோம் என்றார்.


ராமேசுவரத்தில்,தொடர்மின்தடை அனைத்துக் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராமேசுவரத்தில், தொடர்ந்து 2-ம் நாளாக மின்தடை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மின்வாரிய அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ராமேசுவரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை பகல் முதல் வியாழக்கிழமை பகல் 2 மணி வரை மின்சாரம் தடைபட்டது.இதன்பின்னர், வியாழக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரையும், வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையும் மின்தடை செய்யப்பட்டது.தொடர்ந்து 2 நாள்களாக மின்தடை ஏற்பட்டதால், பள்ளி மாணவர்கள் படிக்க முடியாமலும், கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கொசுத் தொல்லையாலும், இரவில் தூங்க முடியாமலும் மிகவும் அவதிப்பட்டனர்.மேலும் கடந்த இரு நாள்களாக நகராட்சி தெருக் குழாய்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் ஒரு குடம் ரூ. 5 கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், மின்தடை பிரச்னையை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி, மின்வாரிய அலுவலகம் முன்பாக அனைத்துக்கட்சியினர் சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் கராத்தே பழனிச்சாமி தலைமை வகித்தார்.காங்கிரஸ் நகர் தலைவர் பாரிராஜன், பாஜக தேசியக் குழு உறுப்பினர் முரளீதரன், திமுக நிர்வாகிகள் பாஸ்கரன், நாசர்கான், சிபிஎம் கட்சியின் முன்னாள் செயலர் கருணாகரன், தேமுதிக செயலர் முத்துகாமாட்சி, இந்து முன்னணி செயலர் ராமமூர்த்தி, பாஜக நகர் பொதுச் செயலர் ராம்பிரசாத், இந்து மக்கள் கட்சி நிர்வாகி நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் முதல் நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை: இராக் இளைஞருக்கு வழியனுப்பு விழாஇந்தியாவில் முதன்முதலாக நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்துள்ள இராக்கைச் சேர்ந்த இளைஞருக்கு வழியனுப்புவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இராக் நாட்டைச் சேர்ந்த கரீம் ஹமீத் அமீன் (33) நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் கடந்த மாதம் 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதன் மூலம்தான் உயிர் பிழைக்க முடியும் என்று அறிவுறுத்தினர். அப்போது விபத்தில் சிக்கி மூளைச் சாவு ஏற்பட்ட 18 வயது இளைஞரின் நுரையீரலை கரீமுக்குப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 16-ம் தேதி தலைமை இதய அறுவை சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர் தலைமையிலான மருத்துவக் குழுவினர், 4 மணிநேரம் அறுவைச் சிகிச்சை செய்து கரீமுக்கு நுரையீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தனர். தற்போது நன்கு குணமடைந்து இராக் நாட்டிற்கு செல்லும் அவருக்கு வழியனுப்பு விழா நடைபெற்றது. விழாவில் தென்சென்னை மக்களவை உறுப்பினர் சிட்லபாக்கம் எஸ்.ராஜேந்திரன் பேசும்போது, அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரத்தில் வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் சுகாதாரம் மேம்பட்ட நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். தற்போது இந்தியாவின் பல மாநிலங்களைச் சேர்ந்த 25 நுரையீரல் நோயாளிகள் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காகப் பதிவு செய்துள்ளனர் என்றார் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர் என்.மதுசங்கர். சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.கந்தன், குளோபல் மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி உமா நம்பியார், நுரையீரல் நோய் மருத்துவர்கள் விஜில் ராகுலன், கோவினி பாலசுப்ரமணி, மயக்கவியல் மருத்துவர் கீர்த்திவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


(தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் சங்கம்) "ஓமியாட்'சார்பாக 4-வது தென் மண்டல அறிவியல் கண்காட்சி

"ஓமியாட்' சங்கத்தின் (தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் சங்கம்) சார்பாக 4-வது தென் மண்டல அறிவியல் கண்காட்சி வரும் புதன்கிழமை (ஜனவரி 11) தியாகராயநகர் அஞ்சுமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.  இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சாதிக் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:  இளம் விஞ்ஞானிகளைக் கண்டறியும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள கண்காட்சியை கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.தமிழகம், வெளிமாநிலங்களிலிருந்து 35 இஸ்லாமிய நிர்வாகப் பள்ளிகள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. இயற்பியல் அறிவியல், உயிர் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் என மூன்று வகையான தலைப்புகளின் கீழ் மாணவர்களால் உருவாக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் இக் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன என்றார்.

சென்னை புத்த கக் கண்காட்சி சென்னை புத்த கக் கண்காட்சியில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணிக்கு நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பேசுகிறார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம், தொழில் அதிபர் நல்லி குப்புசாமி, நாகை முகுந்தன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம், செயலர் எஸ்.வைரவன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். கவிதை பொழிதல் அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு நடைபெறும் கவிதை பொழிதல் நிகழ்ச்சி, கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் தலைமையில் நடக்கிறது. இதில் கவிஞர்கள் பழனிபாரதி, நெல்லை ஜெயந்தா, நந்தலாலா, சேதுபதி, தங்கம் மூர்த்தி, ஆண்டாள் பிரியதர்சினி ஆகியோர் "மணிவாசம்' என்னும் தலைப்பில் கவியரங்கில் பேசுகின்றனர்.இன்று கலாம் பேசுகிறார்


நிவாரணத்துக்கு ரூ.5 ஆயிரம் கோடி: மத்தியக் குழுவிடம் கோருகிறது தமிழகம்தானே' புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நிரந்தரமாக மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என மத்திய குழுவிடம் தமிழகம் கோரிக்கை விடுத்துள்ளது. புயல் சேதத்தை தேசிய பேரிடராக அறிவித்து உரிய நடவடிக்கை, நிவாரண உதவிகளை அளிக்க வேண்டும் என்று தமிழகம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆராய்ந்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்க மத்திய உள்துறை இணைச் செயலாளர் லோகேஷ் ஜா தலைமையிலான குழு சனிக்கிழமை காலை தமிழகம் வந்தது. மாநில தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி தலைமையில் தலைமைச் செயலகத்தில் மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மத்திய வேளாண்மைத் துறை இயக்குநர் கே.மனோகரன், மத்திய நீர்வள ஆதாரத்துறை கண்காணிப்பு பொறியாளர் சுந்தரமூர்த்தி, மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை பொறியாளர் திக்விஜய் மிஸ்ரா, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதுநிலை மண்டல இயக்குநர் பழனிவேலு, மத்திய மின்துறை இயக்குநர் விவேக் கோயல், மத்திய திட்டக்குழு முதுநிலை ஆராய்ச்சி அலுவலர் முரளிதரன், மத்திய குடிநீர் மற்றும் பொதுசுகாதாரத் துறை துணை ஆலோசகர் ஆர்.ஜெ.தத்தா சௌத்ரி, மத்திய கால்நடை மற்றும் மீன்வளத் துறை நிர்வாக இயக்குநர் பி.பால்பாண்டியன் ஆகியோர் அடங்கிய மத்திய குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது. தமிழக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இன்று புதுச்சேரி பயணம்: மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம் மாலை 6 மணிக்கு முடிந்தது. புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினருக்கு இந்தக் கூட்டத்தில் விளக்கப்பட்டது. மேலும், பாதிப்பு குறித்த படத்தொகுப்புகளும் அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது. கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும், அவற்றைச் சீர்செய்வது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது ஆகிய திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனு தமிழகத்தின் சார்பில் மத்திய குழுவினரிடம் அளிக்கப்பட்டது. மத்திய குழுவினர் தங்களது பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 8) தொடங்குகின்றனர். முதலில் அவர்கள் புதுச்சேரி செல்லவுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அங்கு முழு அளவிலான ஆய்வுகளை மேற்கொள்ளும் அவர்கள், திங்கள்கிழமை (ஜனவரி 9) கடலூர் செல்கின்றனர். இரண்டு நாள்கள் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட பின்னர், செவ்வாய்க்கிழமை சென்னை வரவுள்ளனர். இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கக் கூடும் எனத் தெரிகிறது. விரிவான ஆலோசனைக்குப் பின் அவர்கள் தில்லி செல்லவுள்ளனர். ரூ.5 ஆயிரம் கோடி தேவை? புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர் செய்யவும், எதிர்காலத்தில் புயல் போன்ற பேரிடர் ஏற்பட்டால் அதில் அதிக பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வதற்கான நிரந்தர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் தேவை என்று தமிழக அரசு மத்திய குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனாலும், மத்திய குழுவினர் நேரில் ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும். இந்த அறிக்கையை பரிசீலிப்பதற்கென மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கொண்ட குழு தனியாக உள்ளது. அந்தக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்அடிப்படையில் தமிழகத்துக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும் என மத்திய அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Saturday, January 7, 2012

சென்னை புத்தகக் கண்காட்சி புத்தகங்கள் பிரமுகர்கள்

 சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி: சீனாவில் இருந்து இந்தியாவுக்குப் பயணமாக வந்த யுவான் சுவாங், இந்தியாவில் பெüத்த மதம் பரவியிருந்த நகரங்கள் மற்றும் பல்வேறு பயணக் குறிப்புகளை சீன மொழியில் எழுதி வைத்திருந்தார். இது ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தது. இது இப்போது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு "யுவான் சுவாங்' என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை சி.முருகேசன் மொழிபெயர்த்துள்ளார். இதன் ஆங்கில மொழியாக்க நூலை ஏற்கெனவே படித்திருந்தேன். இருப்பினும், தமிழில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்ததால் இந்த நூலைத் தேர்வு செய்தேன்.  அதேபோல சுந்தர வந்தியதேவன் எழுதியுள்ள "பிரமலை கள்ளர்' என்னும் நூலையும் வாங்கினேன். மதுரை பகுதியில் வாழும் பிரமலை கள்ளர்களின் சமூக, சரித்திர சூழல் பற்றிய நாவல் இது. சரித்திர புத்தகங்களைப் படிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் என்பதால் இந்த 2 நூல்களையும் தேர்வு செய்தேன். இரு நூல்களையும் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது.  சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன்: வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ள ஜெயமோகன் எழுதிய "அறம்' என்னும் சிறுகதைகள் தொகுப்பு, தமிழினி பதிப்பகத்தின் "சிலம்பின் காலம்', தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் "தமிழிசை கட்டுரைத் தொகுப்பு' ஆகியவற்றை வாங்கினேன். தமிழ் இலக்கியம் தொடர்பாக வெளிவரும் புதிய புத்தகங்களை உடனுக்குடன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு.  நவீன இலக்கியம், பழங்கால இலக்கியம் ஆகிய இரண்டிலும் தீவிர ஆர்வம் இருப்பதால் இந்த நூல்களை வாங்கினேன்.  எழுத்தாளரும், முன்னாள் டிஜிபியுமான ஜி.திலகவதி: எனது 3 வயதுப் பேத்தி அதுல்யாவுக்காக பல புத்தகங்களைத் தேர்வு செய்தேன். ஹிட்லர், நெல்சன் மன்டேலா, இந்திரா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல் உள்ளிட்ட சர்வதேச, தேசிய தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். ஓவியப் புத்தகங்களையும் வாங்கியுள்ளேன்.  எழுத்தாளர் அழகிய பெரியவன்: இந்த முறை மொழிபெயர்ப்பு நூல்களை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் வந்தேன். கூ கி வா தியாங்கோ என்ற ஆப்பிரிக்க எழுத்தாளரின் "பூமிக்குள் ஓடுகிறது நதி', "சிலுவையில் தொங்கும் சாத்தான்' என்ற மொழியபெயர்ப்பு நூல்களை வாங்கினேன். இது தவிர இளம் கவிஞர்கள் சிலரது கவிதை நூல்களையும் வாங்கியுள்ளேன்.

முதல்முறையாக பார்வையற்றவர்களுக்கான புத்தகங்கள்

சென்னை, ஜன.6: புத்தகக் கண்காட்சிகளின் வரலாற்றில் முதல்முறையாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  க்ரியா பதிப்பக அரங்கில் இவை வைக்கப்பட்டுள்ளன. இந்திய பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து இதற்கான ஏற்பாடுகளை இந்தப் பதிப்பகம் உருவாக்கியுள்ளது.  இந்த அரங்கில் ஆகாயத் தாமரை, அக்னிச் சிறகுகள், திருக்குறள் மூலமும் உரையும், விதியை வென்றவர்கள், லூயி பிரெயில், ஒüவையார் பாடல்கள், நன்னூல்-கூழங்கைதம்பிரான் உரை, நீர் யானை முடியுடன் இருந்தபோது, இதுதான் இஸ்லாம், கடற்புரத்து கிராமம், காற்றில் வந்த கருத்து மழை உள்ளிட்ட 40 வகையான புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.  இவை அனைத்தும் பார்வையற்றவர்களுக்கான பிரெயில் முறையில் எழுதப்பட்டவை. இதில் 4 ஆங்கிலப் புத்தகங்களும் உள்ளன. இந்தப் புத்தகங்களை வாங்க விருப்பம் உடைவயவர்கள் இந்த அரங்கில் உரிய பணத்தை செலுத்திப் பதிவு செய்து கொண்டால் போதும்.  அவர்களது வீடுகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். மதுரையில் உள்ள பார்வையற்றவர்களுக்கான சங்கம் மூலம் இது அனுப்பி வைக்கப்படும். முதல் முறையாக பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு பிரெயில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது அனைத்து படைப்பாளிகளையும், வாசகர்களையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.  இது குறித்து கூடுதல் விவரம் அறிய 9600833226 என்ற செல்போனில் தொடர்புகொள்ளலாம்.

எம்.ஜி.ஆர். திரைப்படப் பயிற்சி நிறுவனத்தில் புதுப்பிக்கப்பட்ட படப்பிடிப்பு தளம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் புதுப்பிக்கப்பட்ட படப்பிடிப்பு தளத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.  இந்தத் தளம் ரூ.1.43 கோடியில் குளிர்சாதன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்புத் தளம் சுமார் 120 அடி நீளமும், 60 அடி அகலமும் கொண்டது. இந்தத் தளம், 2 சிறிய படப்பிடிப்பு கூடங்கள் கொண்டது. இந்த படப்பிடிப்பு தளம் சிறந்த ஒலி மற்றும் ஒளி பதிவு செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று ஆடை மாற்றும் அறைகள், தையல் கூடம் மற்றும் வாகன நிறுத்தம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது.  புகைப்பட மாடம்: முதல்வர் ஜெயலலிதாவால் செயல்படுத்தப்படும் மக்கள் நல சிறப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்த புகைப்படத் தொகுப்புகள் தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் 6-வது நுழைவு வாயிலில் ஒரு மாடமாக உருவாக்கப்பட்டுள்ளது. ரூ.14 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மாடத்தையும் முதல்வர் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலர் தேவேந்திரநாத் சாரங்கி, செய்தித்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, துறையின் இயக்குநர் சங்கர், செயலாளர் ராஜாராம் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Sunday, January 1, 2012

Is Jayalalithaa a future PM?

mgrtvnews.blogspot.com
There have been very few political leaders in our country who have had clarity on various issues. Ever since I was a kid, I have always liked listening to various political functionaries. This period of my special interest in political leaders began I the mid sixties. I specify this because Indira Gandhi onwards I Have tried to keep a close watch on many of our top bosses. I never hesitate to admit that Indira Gandhi continues to be my all time favorite and I do not think any leader, past or present can match her political acumen and skills. Yes, she may have had faults like most humans but the kind of clarity she had, not many who have reached high offices can claim to possess.
Rajiv Gandhi was groomed well but it was only when he was out of power, his understanding of various issues confronting the Nation became sharper. As the Prime Minister, he did take many path breaking steps but he did ultimately realize that there is no substitute for experience.
There was Chandrashekhar, the original Young Turk. When he used to speak, it was from the heart and he touched a chord everywhere. There was no ambiguity on what he said and he needed no advisers to tell him what to say and when to say. He had graduated with flying colors from the school of real politik and could have been a very popular Prime Minister only if he had been a mass leader too. Ramakrishna Hedge was also seen at one time as a potential Prime Minister but he lost out because of his diversionary interests.
Lal Kishen Advani led the BJP to its peak and In the early nineties, if after chandrashekhar there was someone who had exceptional clarity, if was him. That was the phase when Govindacharya was amongst his trusted group of people and Advani of today is not a patch on Advani of the early 90s. But destiny willed otherwise and lesser mortals like H.D.Deva Gowda etc occupied the august office.
Since than there has been no one with the same kind of clear worldview for a long time. However, the other day, I watched J. Jayalalithaa the Tamil Nadu Chief Minister?s interview with Arnab Goswami on Times Now. To say that I was totally bowled over with her exceptional communicating skills will be an understatement. She has so much clarity and such deep understanding of crucial issues, she can easily be a big-ticket player if destiny so wills. It was one of the finest interviews I have watched on the TV and there is no doubt in my mind that no present leader in any political party has the kind of clarity she has. There maybe people who may accuse her of megalomania and being possessed with Tamil Nadu etc but she is one person who has all the making of what it takes to be both the leader of the Nation and a statesman. This only time and destiny will determine even though there may be not many who may share my view on her. She appears to be a woman of substance and after Indira Gandhi may be a no nonsense Prime Minister if she gets a chance. It is evident that she understands politics well and i do share her belief that a lot of things can happen in a not too distant future and much before 2014. I do not know her but have watched her political career evolve. But she was too good on he TV and I am highly impressed with her.

காலாண்டரின் வரலாறை தெரிந்து கொள்வோமா?

கிரேக்கர்கள்தான் முதன்முதலில் காலண்டரை உருவாக்கினர். அவர்களிடம் இருந்து ரோமானியர்கள் இதைக் கற்றுக்கொண்டனர். ஆரம்ப காலத்தில் இன்றுள்ள ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் இல்லை. மார்ச் முதல் டிசம்பர் வரையான பத்து மாதங்களும், 304 நாட்களுமே இருந்தன.
 
கி.மு.700-ல் ரோமானிய மன்னர் நூமா பாம்பிளியஸ் ஜனவரி, பிப்ரவரி மாதங்களைச் சேர்த்து 12 மாதங்களாக்கினார். ஆனால், இந்த இரண்டு மாதங்களும் ஆண்டின் கடைசி இருமாதங்களாக (11,12-வது மாதங்கள்)இருந்தன.
 
கி.மு.46-ல் ஜுலியஸ் சீசர் சில திருத்தங்கள் செய்து, ஜனவரி, பிப்ரவரியை ஆண்டின் முதல் இருமாதங்களாக ஆக்கினார்.  இது ஜுலியன் காலண்டர் என்றழைக்கப்பட்டது.  இதில்தான் சாதா ஆண்டு, லீப் ஆண்டு முறையை கொண்டு வந்தார்கள். இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டர் முறையே கிரிகோரியன் காலண்டர். 
 
பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படி, அலோயிஷியஸ் லிலியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜூலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்.
 
குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார்.
 
ஏசு கிருஸ்துவின் பிறந்ததினத்தை அடிப்படையாகக் கொண்டே இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டது ஜூலியன் காலாண்டரை முன்மாதிரியாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த காலண்டரில் ஒரு ஆண்டு என்பது 365 நாட்கள் 5 மணிநேரம் 49 நிமிடங்கள் 12 நொடிகளை கொண்டது.
 
கிரிகோரியன் காலண்டர் கணக்குபடி ஜனவரி 1-ம் தேதி ஒரு ஆண்டு துவங்கும் நாள் என்றும் டிசம்பர் 31-ம் தேதி ஆண்டின் கடைசி நாள் என்றும் குறிப்பட்டு உள்ளது.
 
இங்கிலாந்து மற்றும் அதன் காலனி நாடுகளில் 1752-ம் ஆண்டில் இருந்து ஜனவரி 1-ம் தேதியை புத்தாண்டாக கொண்டாடும் வழக்கம் துவங்கியது. மேலும் அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஆங்கிலேய ஆட்சி உள்ள எல்லா நாடுகளிலும், கிரிகோரியன் காலண்டர் முறை பயன்பாட்டிற்கு வந்தது. டெயில் பீஸ் - ஜூலியன் காலண்டர் வழக்கத்திற்க்கு வரும் முன் கடைப்பிடிக்கப்பட்ட சில காலண்டர்களின் படி மார்ச் 21ம் தேதியை தான் புத்தாண்டாக கொண்டாடி வந்திருக்கின்றனர்.
 
1582 -ல் ஏற்பட்ட காலாண்டர் பிரச்சினை
 
இன்று பிறந்துள்ள 2012-ம் ஆண்டு லீப் ஆண்டாகும். பொதுவாக ஓர் ஆண்டு என்பது 365 நாட்கள் ஆகும். லீப் வருடத்தில் மட்டும் 366 நாட்கள் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி லீப் வருடம் வரும். லீப் வருடத்தில் மட்டும் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் இருக்கும்.
 
பூமி ஒரு தடவை சூரியனை சுற்றி முடித்தால் அது ஓர் ஆண்டு ஆகும். மிகத்துல்லியமாகச் சொல்ல வேண்டுமெனில் சூரியனை பூமி ஒரு முறை சுற்றி வருவதற்கு 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள் ஆகிறது. இந்த அடிப்படையில் ஆண்டைக் கணக்கிட முடியாது. அதனால் 365 நாட்கள் மட்டும் எடுத்துக் கொண்டு கணக்கிட்டு வருகிறோம்.
 
மீதமுள்ள நேரத்தை (அதாவது 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள்) நான்கு ஆண்டிற்கு ஒரு முறை கணக்கிலெடுத்துக் கொண்டு அதை ஒரு நாளாக கணக்கில் கொள்கிறோம். அதைத்தான் லீப் ஆண்டில் சேர்த்துக் கொள்கிறோம். 366 நாட்கள் உள்ளதை லீப் ஆண்டு என்கிறோம்.
 
இந்த ஆண்டில் வரும் அந்த ஒரு நாளை எதில் சேர்ப்பது? என்ற குழப்பத்திற்கு நானிருக்கிறேன் என்றபடி வரிந்து கட்டிக் கொண்டு பிப்ரவரி இருக்க, அதில் கொண்டு போய் சேர்த்தார்கள். லீப் ஆண்டு வருகையில் பிப்ரவரி மாதம் 29 நாட்களை கொண்டிருக்கும். சரி, இந்த மீதமுள்ள நேரத்தை (அதாவது 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகள்)  கணக்கில் கொள்ளாமல் விட்டால் அது பல நாட்களை சேர்த்துக் கொண்டு போய் முடியும். அப்புறம் ஆங்கிலப்புத்தாண்டு பிப்ரவரியில் ஆரம்பிக்கும்.  அதனால் 1582- அக்டோபரில் ஒரு பிரச்சினையே நிகழ்ந்திருக்கிறது.
 
கிரிகோரியர் காலத்தில் ஜூலியன் காலாண்டர் முறைப்படி வருடத்திற்கு 365.25 நாட்கள் என கணக்கிட்டதால் 10 நாட்கள் அதிகமாகிப்போனது.  இதை சரி செய்ய 1582 ஆம் வருடத்தின் அக்டோபர் மாதத்தில் 5-ம் தேதியிலிருந்து 14-ம் தேதி வரை உள்ள 10 நாட்கள் காலாண்டரிலிருந்தே நீக்கப்பட்டது. இதன் மூலம் 10 நாட்கள் பிந்தி வருவது சரிசெய்யப்பட்டது. அதன் பிறகே லீப் வருடத்தைக் கணக்கிட புதிய முறை கையாளப்பட்டது.
 
ஆங்கில மாதங்களின் பெயர்க்காரணங்கள்...
 
ஜனவரி, பிப்ரவரி என வரிந்து கட்டிக் கொண்டு வரும் ஆங்கில மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் பெயர்க்காரணம் இருக்கிறது. அவைகளை இங்கே காண்போம்:-
 
ஜனவரி: ஜனஸ் என்ற ரோமானிய கடவுளின் பெயரால் இந்த மாதம் அமைந்தது. இவருக்கு கடந்தகாலம், எதிர்காலத்தைக் குறிக்கும் இரண்டு தலைகள் இருந்தனவாம்.
 
பிப்ரவரி: ரோமானியர்கள் இந்த மாதத்தின் 15ம் நாளை புனிதமாகக் கருதி பெப்ருய என்று பெயரிட்டனர். இதற்கு தூய்மை செய்து கொள்ளுதல் என்று பொருள். அதைக் குறிக்கும் வகையில் பெப்ருரியவஸ் என்று பெயரிட்டனர். இதுவே பிப்ரவரி என மாறியது.
 
மார்ச்: ரோமானிய போர்க்கடவுள் மற்றும் விவசாயக் கடவுளின் பெயர் மார்ஸ். ஈட்டி, கேடயத்துடன் காட்சியளிக்கும் இவரது பெயரால் தோன்றியது மார்ச். ஏப்ரல்:  ஏப்பிரைர் என்ற லத்தீன் சொல்லுக்கு திறந்து விடு எனப்பொருள். ஆண்டின் செழிப்புக்கு வழிபிறக்கும் மாதம் என்பதால் இந்தச் சொல்லில் இருந்து ஏப்ரல் மாதம் தோன்றியது.
 
மே:  உலகத்தை சுமக்கும் அட்லஸ் கடவுளின் மகளே மையா என்ற தேவதை. மையாவின் பெயரால் தோன்றிய மாதம் மே. ஜூன்: ஜுனோ என்னும் தேவதையை இளமையின் சின்னமாக ரோமானியர்கள் வழிபட்டனர். இந்தப் பெயரால் வந்தது தான் ஜுன். ஜூலை:  ஆரம்ப காலத்தில் இது ஐந்தாவது மாதமாக இருந்தது. ஐந்தை க்விண்டிஸ் என்பர். மார்க் ஆண்டனி இந்தப்பெயரை மாற்றி ஜுலியஸ் சீசரின் பெயரால் ஜுலி என்று பெயர் சூட்டினார். 19ம் நூற்றாண்டு முதல் ஜுலை என்றானது.
 
ஆகஸ்ட்:  ஆரம்பத்தில் இது ஆறாவது மாதமாக இருந்தது. ஆறு என்ற எண்ணை செக்ஸ்டிலிஸ் என்ற கிரேக்க மொழியில் அழைத்தனர். ஜுலியஸ் சீசர் இதை எட்டாவது மாதமாக்கிய பிறகு ரோமானியர்கள் தங்கள் மன்னரான அகஸ்டஸை பெருமைப்படுத்தும் விதத்தில் அகஸ்ட்ஸ் என பெயரிட்டனர். அதுவே ஆகஸ்ட் என மாறியது.
 
செப்டம்பர்:  மார்ச் முதல் மாதமாக இருந்த காலத்தில் செப்டம்பர் ஏழாவது மாதமாக இருந்தது. ஏழு என்ற எண்ணை ரோமானிய மொழியில் செப்டம் என்றனர்.ஆனால், புதிய அமைப்பின்படி ஒன்பதாம் மாதமாக மாறி விட்டாலும் கூட பழையபெயரே நிலைத்து விட்டது.
 
அக்டோபர்:  அக்ட்டோ என்றால் எட்டு. ஆரம்பத்தில் எட்டாவது மாதமாக அக்டோபர் இருந்தது. இதுவும் பெயர் மாற்றம் செய்யப் படாமல் பத்தாவது மாதமாகி விட்டது.
 
நவம்பர்:  நவம் என்றால் ஒன்பது. ஒன்பதாம் மாதமாக ஆரம்பத்தில் இதைக் கணித்தனர். 11ம் மாதமாக மாறிய பிறகும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை.
 
டிசம்பர்: டிசம் என்றால் பத்து. பத்தாம் மாதமாக இருந்த டிசம்பர், 12ம் மாதமான பிறகும் பெயர் மாற்றப்படாமல் பழைய பெயரிலேயே அழைக்கப்பட்டது.