Sunday, January 8, 2012

பாகிஸ்தான் சிறையிலிருந்து 180 இந்தியர்கள் விடுதலைஇந்தியாவுடன் நல்லுறவை வளர்க்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக பாகிஸ்தான் நாட்டின் நீர் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்ட 179 மீனவர்கள் உள்ளிட்ட 180 இந்தியர்களை அந்நாடு இன்று விடுதலை செய்துள்ளது. விடுதலை செய்யப்பட்ட அனைவரும் 4 பஸ்களில் லாகூர் அருகே வாகா எல்லைக்கு கொண்டுவரப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 179 மீனவர்கள் தவிர மீதமுள்ள ஒரு நபர் பாகிஸ்தான் எல்லையில் அத்து மீறி நுழைந்ததாக கைது செய்யப்பட்டவராவார். அவரது பெயர் சாமா யூசுப் ஆகும். நன்னடத்தை காரணமாக இன்று அவர் விடுதலை செய்யப்பட்டார். அவர் பாகிஸ்தான் சிறை குறித்து கூறியதாவது:- 'பாகிஸ்தான் சிறையில் இன்னும் 271 இந்திய மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 320 விசைப்படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தானிலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலம் நாங்கள் விடுதலை அடைந்திருக்கிறோம் என்றார்.


No comments:

Post a Comment