Monday, July 1, 2013

போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் உயர் போலீஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

 ஜூலை 1- பாண்டேவை கைது செய்ய சி.பி.ஐ. தீவிர முயற்சி 

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் அருகே கடந்த 2004ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., ஜூலை 4ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குஜராத் ஐகோர்ட் கெடு விதித்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடந்தபோது குற்றப்பிரிவு இணை ஆணையராக இருந்த பாண்டே மீது சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில், முதல்வர் நரேந்திர மோடியை கொல்லும் திட்டத்துடன், கல்லூரி மாணவி இஷ்ரத் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் நுழைந்திருப்பதாக பாண்டே, தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எப்.ஐ.ஆரை நிறுத்தி வைக்கக் கோரி பாண்டே சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து பாண்டேவை கைது செய்ய சி.பி.ஐ. தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment