Friday, July 27, 2012

நாம்| தமிழர் கட்சி செய்திகள்

விலை உயர்வை எதிர்ப்பதால் கூட்டணியை விட்டு விலகுவதாக அர்த்தம் இல்லை: மம்தா



 ஜூலை 27-
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்ப்பதால், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை விட்டு விலகப்போவதாக அர்த்தம் இல்லை என்று மம்தா பானர்ஜி கூறினார்.
 
மேற்கு வங்க மாநிலம் பில்பம் மாவட்ட தலைநகரில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, ‘மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் பெட்ரோல், உரம் போன்றவற்றின் வலையை மத்திய அரசு உயர்த்துவதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்க மாட்டோம். எதிர்காலத்திலும் இதை ஆதரிக்க மாட்டோம். அதற்காக நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகுவதாக அர்த்தம் இல்லை.
 
திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, ஐ.மு. கூட்டணியில் இருந்து விலகினால், தாங்கள் காங்கிரசுடன் இணையலாம் என்று மார்க்சிஸ்ட் நினைத்திருந்தால், ஏமாற்றமே கிடைக்கும்’ என்றார்.
 
உர விலை உயர்வால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உர விலையை குறைக்கும்படி மத்திய அரசிடம் முறையிடுவேன் என்றும் மம்தா உறுதி அளித்தார்.