Sunday, January 8, 2012

(தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் சங்கம்) "ஓமியாட்'சார்பாக 4-வது தென் மண்டல அறிவியல் கண்காட்சி

"ஓமியாட்' சங்கத்தின் (தமிழ்நாடு இஸ்லாமிய கல்வி நிறுவனங்களின் சங்கம்) சார்பாக 4-வது தென் மண்டல அறிவியல் கண்காட்சி வரும் புதன்கிழமை (ஜனவரி 11) தியாகராயநகர் அஞ்சுமன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.  இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சாதிக் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:  இளம் விஞ்ஞானிகளைக் கண்டறியும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் இந்த அறிவியல் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள கண்காட்சியை கான்பூர் ஐ.ஐ.டி. தலைவர் மு.ஆனந்தகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.தமிழகம், வெளிமாநிலங்களிலிருந்து 35 இஸ்லாமிய நிர்வாகப் பள்ளிகள் இக்கண்காட்சியில் பங்கேற்கின்றன. இயற்பியல் அறிவியல், உயிர் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல் என மூன்று வகையான தலைப்புகளின் கீழ் மாணவர்களால் உருவாக்கப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் இக் கண்காட்சியில் இடம் பெறுகின்றன. சிறந்த கண்டுபிடிப்புகளை உருவாக்கிய மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன என்றார்.

No comments:

Post a Comment