Monday, July 1, 2013

கரடி தாக்கி காயமடைந்த வனக்காப்பாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வெகுமதி: ஜெயலலிதா அறிவிப்பு

கரடி தாக்கி காயமடைந்த வனக்காப்பாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வெகுமதி: ஜெயலலிதா அறிவிப்புசென்னை, ஜூலை 1-

முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம், கனமூர் வனப்பகுதி, பள்ளக்குழி கிராமம் அருகே 30.6.2013 அன்று கிணற்றில் தவறி விழுந்த கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டபோது வனக்காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகியோர் கரடியால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

சம்பவ தினத்தன்று கிணற்றுக்குள் தவறி விழுந்த கரடியை வலையில் கட்டி மீட்டு வெளியில் கொண்டு வந்தபோது, வலையிலிருந்து விடுபட்டு அருகில் நின்றிருந்த பொதுமக்களைத் தாக்க முற்பட்ட கரடியினை வனக்காப்பாளர்  ரஹமத்துல்லா தைரியத்துடன் தடுக்க முயன்றுள்ளார். அப்போது, கரடி அவரது தலையிலும், முகத்திலும் தாக்கியதில் பலத்த காயம் அடைந்துள்ளார்.

ரஹமத்துல்லாவை கரடியிடமிருந்து மீட்க முற்பட்டபோது, வனக்காப்பாளர் ரமேஷூக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கரடி துரத்தியதில் அருகிலிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்ததில் அவரது வயிற்றில் அடிப்பட்டுள்ளது. வனக்காப்பளர் ரஹமத்துல்லா சமயோசிதமாக யாருடைய உந்துதலும் இன்றி, தனது உயிரையும் துச்சமென மதித்து, கரடியுடன் போராடி பொதுமக்களை காப்பாற்ற மேற்கொண்ட துணிச்சலான செயல்பாட்டிற்கு எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்நிகழ்வில் ரஹமத்துல்லா அவர்களுக்கு உதவிய வனக்காப்பாளர் ரமேஷ் அவர்களையும் நான் பாராட்டுகிறேன். வனக் காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகியோரின் வீரச்செயலையும், தன்னலம் கருதாத சமுதாய அக்கறையையும், கடமை உணர்வையும் பாராட்டி அங்கீகரிக்கும் வகையில் இருவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இந்நிகழ்வில் காயமடைந்த வனக் காப்பாளர்கள் ரஹமத்துல்லா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரையும் சிறந்த மருத்துவமனையில் அனுமதித்து அரசு செலவில் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கவும் நான் கிருஷ்ணகிரி மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். தேவைப்படின், சென்னையிலுள்ள மிகச்சிறந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறும் இவர்களுக்கான முழு மருத்துவ செலவினை அரசு ஏற்றுக்கொள்ளவும் நான் உத்தரவிட்டுள்ளேன். இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவை பிரதமராக்காமல் ஓய மாட்டோம்: அமைச்சர் வைகைசெல்வன் பேச்சு

 கர்நாடகம் , உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழகத்தின் திட்டங்களை முன்னிறுத்தி வெற்றி பெற்றன. எட்டு இந்திய பிரதமர்களை கேள்வி கேட்கும் முதல்வராக புரட்சி தலைவி திகழ்கிறார். ராஜீவ்காந்தியை ஓரு முறை இரவு பத்து மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பிரதமர் தூங்க சென்று விட்டார் என பதில் வந்தது. 
ஜெயலலிதாவை பிரதமராக்காமல் ஓய மாட்டோம்: அமைச்சர் வைகைசெல்வன் பேச்சு
தைரியமாக இரவு பத்து மணிக்கு இந்திய பிரதமர் தூங்கினால் நாடு என்னாவது என்று கேள்வி கேட்டவர் முதல்வர் ஜெயலலிதாதான். ராஜீவ் காந்தி முதல் இன்று இருக்கும் பிரதமர் மன்மோகன் சிங் வரை கேள்வி கேட்கும் தைரியம் முதல்வர் ஜெயலலிதாவிற்கு மட்டுமே உண்டு. இதுவரை அ.தி.மு.க.வில் வருடத்தில் ஜெயலலிதா பிறந்தநாள், அண்ணா பிறந்த நாள் உட்பட 6 விழாக்களை மட்டுமே கொண்டாடி வந்தோம். அம்மாவின் உத்தரவுபடி இனிமேல் 7-வதாக இளைஞர் இளம்பெண்கள் பாசறை எழுச்சி நாள் கொண்டாடி வருகிறோம். தமிழக முதல்வரை பிரதமராக்காமல் ஓய மாட்டோம் என ஒவ்வொரு இளைஞர்- இளம்பெண்கள் பாசறையினர் ஓயாமல் உழைக்க வேண்டும். 

இவ்வாறு பள்ளிகல்வி துறை அமைச்சர் வைகைசெல்வன் பேசினார். 

என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசுக்கு விற்பது குறித்து பரிசீலனை:

புதுடெல்லி, ஜூலை 1-

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மேலும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-

நெய்வேலி என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு வாங்க விரும்புவது குறித்த செய்தியை பத்திரிக்கை செய்திகளில் படித்தேன். முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நான் படிக்கவில்லை. 

இருந்தும், முதல் அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசின் கோரிக்கையானது செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகிறதா என்பது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய தலைமை வர்த்தக பிரிவை நான் கேட்பேன். 

பங்குகளை தமிழக அரசுக்கு விற்பனை செய்வது குறித்து நான் பரிசீலிக்கவே விரும்புகிறேன். ஆனால் நாங்கள் பங்கு பரிவர்த்தனை வாரியத்துடன் (செபி) ஆலோசிக்கவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

போலி என்கவுண்டர் வழக்கு: குஜராத் உயர் போலீஸ் அதிகாரியின் மனு தள்ளுபடி

 ஜூலை 1- பாண்டேவை கைது செய்ய சி.பி.ஐ. தீவிர முயற்சி 

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகர் அருகே கடந்த 2004ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேரை என்கவுண்டர் என்ற பெயரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., ஜூலை 4ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்று குஜராத் ஐகோர்ட் கெடு விதித்துள்ளது.

இந்நிலையில், சம்பவம் நடந்தபோது குற்றப்பிரிவு இணை ஆணையராக இருந்த பாண்டே மீது சி.பி.ஐ. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில், முதல்வர் நரேந்திர மோடியை கொல்லும் திட்டத்துடன், கல்லூரி மாணவி இஷ்ரத் மற்றும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 3 பேர் நுழைந்திருப்பதாக பாண்டே, தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எப்.ஐ.ஆரை நிறுத்தி வைக்கக் கோரி பாண்டே சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து பாண்டேவை கைது செய்ய சி.பி.ஐ. தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.