Monday, July 1, 2013

என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசுக்கு விற்பது குறித்து பரிசீலனை:

புதுடெல்லி, ஜூலை 1-

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

மேலும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் 5 விழுக்காடு பங்குகளை தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்றும், தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்றும் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா 25.6.2013 அன்று பாரதப் பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார். 

இந்நிலையில் இதுகுறித்து நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:-

நெய்வேலி என்.எல்.சி. பங்குகளை தமிழக அரசு வாங்க விரும்புவது குறித்த செய்தியை பத்திரிக்கை செய்திகளில் படித்தேன். முதல் அமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு எழுதிய கடிதத்தை நான் படிக்கவில்லை. 

இருந்தும், முதல் அமைச்சர் எழுதியுள்ள கடிதத்தை ஏற்றுக்கொண்டு, தமிழக அரசின் கோரிக்கையானது செபி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வருகிறதா என்பது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய தலைமை வர்த்தக பிரிவை நான் கேட்பேன். 

பங்குகளை தமிழக அரசுக்கு விற்பனை செய்வது குறித்து நான் பரிசீலிக்கவே விரும்புகிறேன். ஆனால் நாங்கள் பங்கு பரிவர்த்தனை வாரியத்துடன் (செபி) ஆலோசிக்கவேண்டும். 

இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment